Saturday, September 22, 2012

துணுக்குத் தோரணம்


எக்காலத்துக்கும் பொருந்தும் செய்திகள்

ரங்களிலிருந்து உதிரும் இலைகள் உரமாகப் பயன்படுத்தப்படாமல் எரிக்கப்படுவதன் மூலம், ஏராளமான இயற்கைச் செல்வம் வீணாகிறது.  மரங்களுக்கு அருகில் குழிகள் வெட்டி, அவற்றில் இலைகளைப் புதைத்து வைத்தால், தோட்டங்களுக்குத் தேவையான உரம் கிடைக்குமே! இதனால் ரசாயன உரங்களின் பயன்பாடு குறைவதுடன், தோட்டங்களைப் பராமரிப்பதற்கான செலவும் குறையும்.
 - 'March of the Nation' 8-12-1973 இதழில் வெளியான ஒரு வாசகர் கடிதம்.


எட்டுக்குள் அடங்கும் இவர் உலகம்!
கலிஃபோர்னியா மாநிலத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வந்த ஸ்டான் கில்பர்ட் என்பவருக்கு எட்டாவது மாதம் (ஆகஸ்ட்), எட்டாம் தேதியன்று எட்டாவது பேரன் பிறந்தான். குழந்தையின் எடை 8 பவுண்ட் 8 அவுன்ஸ்!  தன்னுடைய அதிர்ஷ்ட எண்ணைச் சோதிப்பதற்காக அவர் 8ஆவது ரேசில் 8ஆம் எண் குதிரை மீது 8 டாலர் பந்தயம் கட்டினார். 'இன்றும் நாளையும்' என்ற அந்தக் குதிரை எட்டாவதாக வராமல் முதலில் வந்து அவருக்கு 80 டாலர் 80 சென்ட் பரிசு பெற்றுத் தந்தது!

ஃபிரான்ஸில் ஒரு பல்கலைக் கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் நூலகத்தையே திருடிக் கொண்டு போய் விட்டார்களம். கோடை விடுமுறையின்போது ஒரு சனிக்கிழமையன்று 30,000 புத்தகங்களைப் பல லாரிகளில் திருடிக் கொண்டு போயிருக்கிறார்கள்!


No comments:

Post a Comment